இந்தியாவில் அமலுக்கு வந்த 10 மெகா மாற்றங்கள்

Share

இந்தியாவில் இன்று முதல் பத்து துறைகளில் மெகா மாற்றங்கள் நடந்துள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் போர் எதிரொலியாக அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளன.

  1. 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ. 203 அதிகரித்து, ரூ. 2246 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  2. டிஜிட்டல் பண பரிவர்த்தனை மோசடிகளை தடுக்க இன்று முதல் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 5 முறை இலவச பரிவர்த்தனை முடிந்து விட்டால் ஏடிஎம் மற்றும் யூபிஐ பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்படும்.
  3. தமிழ்நாட்டில் 68 சுங்கச் சவடிகளில் வாகனங்களுக்கு ஏற்ப ரூ.10 முதல் ரூ.200 வரை கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இனி சுங்க கட்டணம் ரொக்கமாக செலுத்துவது முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  4. கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க 20% எத்தனால் கலக்கப்பட்ட E 20 பெட்ரோல் இன்று முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  5. பாதுகாப்பு தரத்தை உறுதிப்படுத்த சீனாவில் தயாரிக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களை இந்தியாவில் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
  6. தங்கத்தின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் கடன் தொகைக்கு புதிய வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ. 2.5 லட்சம் வரை கடன் பெறுபவர்கள் தங்கத்தின் மதிப்பில் அதிகபட்சம் 85% வரை கடன் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  7. பான் கார்டு பெற பிற பிறப்புச் சான்றிதழ், 10 ம் வகுப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிப்பது கட்டாயம்.
  8. இந்தியாவில் விமான எரிபொருள் விலை இரு மடங்காக உயர்ந்ததால் விமான டிக்கெட்டுகளின் விலை பெரும் அளவு உயரம் அபாயம் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு விமானங்களுக்கான விமான எரிபொருள் விலை 1000 லிட்டர் ரூ. 96,238 ல் இருந்து ரூ.2.07 லட்சமாக உயர்ந்துள்ளது. சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலை 1000 லிட்டருக்கு ரூ.76,311 ல் இருந்து ரூ.1.58 லட்சமாக உயர்ந்துள்ளது.
  9. ரயில் புறப்படும் 8 மணி நேரத்திற்குள் டிக்கெட் ரத்து செய்தால் எந்த தொகையும் திரும்ப கிடைக்காது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
  10. புதிய வருமான வரிச் சட்டத்தில் நிதியாண்டு, மதிப்பீட்டு ஆண்டு என்ற முறை நீக்கப்பட்டுள்ளது மேலும் வரி ஆண்டு என்ற ஒற்றை முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள இந்த மாற்றங்களில் உங்கள் கருத்து என்ன ?

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *