தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ச. ஜோசப் விஜய் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில் முக்கியமாக, 2021 மே முதல் 2026 ஏப்ரல் வரை அமைதியான போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், தமிழக நகர்ப்புற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ₹11,000 கோடிக்கும் மேற்பட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குடிநீர், கழிவுநீர், சாலைகள், குப்பை மேலாண்மை உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ₹4,800 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து துறையிலும் முக்கிய மாற்றமாக, செப்டம்பர் 15 முதல் Digital Driving Licence மற்றும் Digital RC வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும், பதிவு மற்றும் உரிமம் தொடர்பான சேவைகளை எளிதாக்கும் “Anywhere Registration/Licensing” முறையும் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீதான வழக்குகள் வாபஸ், நகர வளர்ச்சிக்கு ₹11,000 கோடி, குடிநீர் திட்டங்களுக்கு ₹4,800 கோடி, RTO சேவைகளில் டிஜிட்டல் மாற்றம் — இன்றைய சட்டப்பேரவையின் முக்கிய அறிவிப்புகளாக அமைந்துள்ளன.

ராகவி முத்துக்குமார் | இவள் தமிழி
நான் ராகவி முத்துக்குமார். “இவள் தமிழி” என்ற பெயரில் தமிழ்நாடு மற்றும் உலகின் முக்கிய செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்.
தமிழ்நாடு அரசியல், மாவட்ட செய்திகள், இந்தியா மற்றும் உலக செய்திகள், வேலைவாய்ப்பு, கல்வி, அரசு அறிவிப்புகள் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான முக்கிய தகவல்களை எளிமையாகவும் தெளிவாகவும் வழங்குவதே எங்களின் நோக்கம்.
உண்மைத்தன்மை, தெளிவு மற்றும் பொறுப்பான செய்தி வழங்கலை அடிப்படையாகக் கொண்டு, வாசகர்களுக்கு பயனுள்ள தகவல்களை தொடர்ந்து வழங்குகிறோம்.
இவள் தமிழி – பெண்ணின் பார்வை… தமிழின் பெருமை…
